29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு ஒரு பலமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இருந்தவாறு காணொளி தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நாம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்வது சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. தமது குடும்பத்தை வலப்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காகவாகும்.

அவர்கள் நாட்டிற்கு பாராமாக அன்றி நாட்டிற்கு பலமாக இருப்பதாகவே நாம் நம்புகின்றோம். அவர்களுக்கு அவர்கள் உள்ள நாடுகளிலும், வேலைத்தளங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் அறிவோம்.

சிலவேளைகளில் அந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த விடயங்களை விரைவாகச் சரிசெய்ய செய்ய வேண்டியிருக்கும் போது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அல்லது திடீர் மரணங்கள் சம்பவிக்கும் நிச்சயமாக தூதரகத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமாத்திரமன்றி வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அறியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் ஒரே இடம் தூதர அலுவலகமாகும் என்றார்.





வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு