ஒட்டமாவடி பிரதேசத்தில் இன்னும் 300 சடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும் எனவும் பின்னர் இடப்பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கொவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு புதிய இடமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை இரக்காமம் பகுதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் வரையில் ஒட்டமாவடியில் 1470 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம்களின் 1383 சடலங்களும், பௌத்தர்களின் 24 சடலங்களும், இந்துக்களின் 39 சடலங்களும், கிறித்தவர்களின் 24 சடலங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..