நாட்டில் ஏற்பட்ட கொவிட் நிலைமை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான திகதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன
எனினும் தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமை காரணமாக பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..