09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

5G உட்கட்டமைப்பில் ஹுவாவியை அனுமதிக்கக் கூடாது -ரொம் ரூஜென்ராட் எம்பி

சீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியான ஹுவாவி (Huawei) தொலைத் தொடர்பு நிறுவனத்தை பிரித்தானியாவின் 5G உட்கட்டமைப்பில் அனுமதிக்கக் கூடாது என்று கொன்சர்வேற்றிவ் பாராளுமன்ற உறுப்பினரான ரொம் ரூஜென்ராட் அறிவிப்பு விடுத்துள்ளார்.


மேலும் ஹுவாவியை 5G உட்கட்டமைப்பில் அனுமதிப்பதானது நரியை கோழிக் கூட்டிற்குள் நுழைய அனுமதிப்பது போன்றது என்று அவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிரிட்டனின் 5G வலையமைப்பில் ஹுவாவி வகிக்கும் பங்கு என்ன என்பது குறித்த ஒரு முடிவு, விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரித்தானியாவின் முக்கியமான தகவல் தொடர்பு வலையமைப்பில் ஹுவாவியை அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று சில பகுதிகளிலிருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


5G வலையமைப்பில் ஹுவாவி (Huawei) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.


இந்நிலையில் பிரித்தானிய உளவுத்துறையுடனான பகிர்வை ட்ரம்ப் நிர்வாகம் மீள்பரிசீலனை செய்யும் என்று வோஷிங்ரனில் உள்ள மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதேவேளை 5G வலையமைப்பில் ஹுவாவியை அனுமதிப்பதால் அமெரிக்காவுடனான பிரிட்டனின் உறவு பாதிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று MI5 இன் தலைவர் கூறியுள்ளார்.




5G உட்கட்டமைப்பில் ஹுவாவியை அனுமதிக்கக் கூடாது -ரொம் ரூஜென்ராட் எம்பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு