பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.
‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..