27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு நாளாந்தம் பேரிடியாக மாறிவரும் தகவல்

நாடளாவிய ரீதியில் அரிசி வகைகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன்,அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நாட்டின் பல நகரங்களில் அரிசி விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வர்த்தகர்கள் தமக்கு ஏற்ற வகையில் விலைகளை மாறுபட்ட வகையில் உயர்த்தி விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாடு, வெள்ளை பச்சை மற்றும் சிகப்பு பச்சை அரிசிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோ கிராம் அரிசி 10 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் இடையிலான விலையில் அதிகரித்துள்ளது.

மேலும் சில பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாடு அரிசி தற்போது 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி தற்போது 180 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளது.





இலங்கை மக்களுக்கு நாளாந்தம் பேரிடியாக மாறிவரும் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு