26,Apr 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

பாராசிட்டமால் மாத்திரைக்கான மூலப்பொருள் -----

சாதாரண பாராசிட்டமால் மாத்திரைக்கான மூலப்பொருள் கூட சீனாவில் இருந்து தான் வருகிறது என்று சொல்கிறார்கள். அது கூடவா நம்மிடம் இல்லை?

பாரசிட்டமால் மாத்திரை தயாரிக்க கீழ் வரும் மூலப் பொருட்கள் தேவைப்படும்.

  1. பாரசிட்டமால் (Paracetamol)
  2. ஸ்டார்ச் (Starch)
  3. ஜெலடின் (Gelatin)
  4. மெத்தில் பாரபின் சோடியம் (Methyl Paraben Sodium)
  5. பிவிபி கே 30 (PVP K30)
  6. சோடியம் ஸ்டார்ச் க்ளைகோலேட் (Sodium starch glycolate)
  7. மைக்ரோ க்ரிஸ்டலைன் செல்லுலோஸ் (Micro crystalline cellulose)
  8. டால்க் (Talc)
  9. மக்னீசியம் ஸ்டியரேட் (Magnesium Streate)

இவையனைத்தும் இந்தியாவில் தயாரிக்கும் மூலப்பொருட்கள் தான்.

கூகுளில் நீங்களே தயாரிப்பாளர்களை தேடி அறிந்து கொள்ளவே இதனை கொடுத்துள்ளேன்.

பொதுவாகவே, மருந்து பொருட்களுக்கான மூலப் பொருட்கள் அனைத்தும் இங்கேயே கிடைக்கும்.

அதிகமாக கொள்முதல் செய்பவர்கள், விலை குறைப்பிற்காக சீனாவை நாடுவர்.

இந்தியாவில் தயாரிக்க முடியாத மருந்துகள் என்பவை மிக மிக சொற்பம் மட்டுமே..

உண்மையில் சீனாவை விட இந்தியாவே அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.


2018-ல் அதிகம் மருந்துகள் ஏற்றுமதி செய்த முதல் 15 நாடுகளில் சீனா இடம் பிடிக்கவில்லை.. இந்தியா 13.1 பில்லியன் டாலர் அளவுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்து 10வது இடத்திலும் ஜெர்மனி முதலிடத்திலும் உள்ளது.

மருந்து பொருட்களின் தயாரிப்பில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று..

உசாத்துணைகள் :

Drugs and Medicine Exports by Country

The World's Pharma Lords: Which Countries Buy & Sell the Most Drugs?

Chapter 1. World medicine production

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பாராசிட்டமால் மாத்திரைக்கான மூலப்பொருள் -----

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு