விசுவாவசு வருடம் சித்திரை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை
மேஷம்:
தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். வீடு கட்டுபவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்:
மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம்.பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும்.
மிதுனம்:
அத்தியாவசிய தேவை நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் கனவு நனவாகும்.
கடகம்:
நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
சிம்மம்:
பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர். சற்று தங்களுடைய உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் புதிதாக்க வாங்குவீர்கள்.
கன்னி:
தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல மாற்றம் நடக்கும்.
துலாம்:
மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். திய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போட வேண்டாம். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்.
விருச்சிகம்:
உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்.
தனுசு:
அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து நன்மைகளும் தங்களுக்கு உண்டாகும். பெண்களின் சேமிப்புஉயரும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். திடீர் பணவரவு உண்டு. ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.
கும்பம்:
சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று அவிட்டம் மற்றும் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.
மீனம்:
பெண்களின் கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முற்படுவார்கள். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/todays-horoscope-09052025-1156770
0 Comments
No Comments Here ..