இலங்கை மக்களை கொதிப்புள்ளாக்கி உள்ள விவகாரம்தான் 15து வயது மாணவியை உயிர்மாய்த்துக்கொண்ட விவகாரம். குறித்த மனைவிக்கு பாடசாலையில் கல்விகற்கும் ஆசிரியரால் பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவியை மனதளவில் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதற்க்கான நடவடிக்கைகளை எடுத்ததோடு மாணவியையும் வேறு பாடசாலைக்கு மாற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்ததற்கு முன்தினம் குறித்த மாணவியை பலமாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் மிகமோசமாக திட்டியுள்ளார். குறித்த இந்த ஆசிரியர் ஏற்கனவே மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சக ஆசிரியரின் நண்பரரெண்டு சொல்லப்படுகின்றது.
தொடர்சியாக இப்படியான மோசமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டதால் அந்த பள்ளி மாணவி தவறான முடிவை எடுத்துள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து கடிதமொன்றையும் அழுவைத்துள்ளார்.
இந்தநிலையில், உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தினால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிக்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..