உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரணடையமாட்டோம் என்று பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 3 ஆம் திகதி செர்னிஹிவ் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
38 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என மொத்தம் 47 பேர் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்ய போரில் இதுவரை 9,000 வீரர்கள் ரஷ்ய தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் தரப்பில் 2,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
0 Comments
No Comments Here ..