05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும்,பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும், உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும்,நிதியுதவியினையும் வழங்கி வருகின்றது.

இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் விமானங்களை தகர்க்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பென் வாலஸ், பிரித்தானியாவை சீண்டும் வேலை வேண்டாம் எனவும், எங்களைச் சோதிக்க முற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு