சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 80,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால் தொடர்ந்தும் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..