மட்டக்களப்பு பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் இன்று நண்பகல் 12 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் உள்ள வாவியில் இருந்தே பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காணும் முகமாக காத்தான்குடி காவல்துறையினர் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..