26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவா நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் என்பன ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் இவ்வாறான பின்னணியில் தேர்தல் நடாத்துவது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்த அடிப்படையில் இணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமாயின் பத்து பில்லியன் ரூபா செலவாகும் எனவும், எரிபொருள் தட்டப்பாட்டுப் பிரச்சினைக்கு மத்தியில் தேர்தல் நடாத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்களை செய்வதற்கும் குறைந்தபட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 








தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு