20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபயவை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து தமிழர் உட்பட மூவரைக் களம் இறக்கிய ரணில்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில முக்கியமான அரசியல் பிரதிநிதிகளையும் வேறு சில நிபுணர்களையும் அழைத்து மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார்.

அந்த உரையாடலின் பிரகாரம் தான் முன்னாள் மத்திய வங்கியின் ஆணையாளர், பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட சில குழுக்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் எல்லோருமே ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைகளின் படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருவதாக மூத்த பத்திரிக்கையாளர் நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து உள்ளது. அரசில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் என்பது குறிப்பிட்ட ஒர் அமைச்சர்களே அமைச்சரவையில் இருக்கின்றனர். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஜனாதிபதி கைவசமே உள்ளது. அமைச்சர்கள் இல்லாமல் நாடு நீண்ட நாட்கள் பயணிக்கிறது. இவை அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே கூட்டு செயற்பாடுகள் மூலம்தான் பொருளாதாரத்தை கட்டமைக்கலாம். அரசியல் என்பது வேறு, ஆனால் பொருளாதார நடவடிக்கைகளின் கட்டமைப்பு என்பது வேறு. இதன் அடிப்படையில்தான் தற்போது இந்த உணர்வுகள் ஏற்பட்டுள்ளன.





கோட்டாபயவை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து தமிழர் உட்பட மூவரைக் களம் இறக்கிய ரணில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு