03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

பிரான்ஸ் தனது காவல் துறையில் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என ஐ.நா

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயல்பட்டார் என்பதற்காக 17 வயது சிறுவன் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் அச்சிறுவன் பலியாகியுள்ளார்.


சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.


இந்த நிலையில் பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 


17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் அரசு இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.





பிரான்ஸ் தனது காவல் துறையில் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என ஐ.நா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு