கொழும்பு, பொரளையில் நேற்று இடம்பெற்ற கறுப்புஜுலை நிகழ்வில் சிலர் குழப்பம் விளைவிக்க முயன்ற நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பொலிஸார் பலத்தை பிரயோகித்து அமைதி வழியில் நிகழ்வை முன்னெடுத்தவர்களை கலைக்க முயன்றனர்.
இலங்கையில் 83 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொரளை மயானத்திற்கு அருகாமையில் நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கறுப்பு ஜூலையில் உயிரிழந்தவர்களுக்காக, அவர்களது உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் சுமார் நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸார், இராணுவம், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் நீர்த்தாரை வாகனங்கள் என பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த இடத்தில் அமைதியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒருசிலர் குலப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு குறித்த நிகழ்வை நடத்த விடாமால் குழப்பத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை உருவாகியிருந்தது.
0 Comments
No Comments Here ..