04,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரு தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டி இலங்கையில்

எதிர்வரும் 22 முதல் 26 ஆம் திகதிவரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளுக்காக ஆப்கானிஸ்தான் அணி கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று (17) இலங்கை வந்தடைந்தது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற வேண்டிய இப்போட்டிகளை, அந்நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் இரு போட்டிகள் 22, 24 ஆம் திகதிகளில் அம்பாந்தோட்டையிலும் 3 ஆவது போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளன.


இலங்கையில் இப்போட்டிகளை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்தமை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இப்போட்டிகளை நடத்துவதற்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் உட்பட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீர்ரகள் பலர் தற்போது இலங்கையில் நடைபெறும் லங்கா ப்றீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிக்கான நடுநிலை இடமாக இலங்கை விளங்கியிருந்தது.

2002 ஒக்டோபரில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை கொழும்பி பி. சரவணமுத்து அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. அத்தொடரின் ஏனைய இரு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் நடைபெற்றன.




ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரு தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டி இலங்கையில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு