இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி, இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. முதல் டெஸ்ட், மார்ச் 19 அன்று தொடங்க இருந்தது. 2 வது மற்றும் கடைசி டெஸ்ட், மார்ச் 31 அன்று நிறைவடைய இருந்தது.
டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விளையாடியது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வேறொரு தருணத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..