29,Mar 2024 (Fri)
  
CH
விளையாட்டு

முதலாவது ரி-20 போட்டியில் இலங்கையை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, லெண்ட்ல் சிமொண்ஸ் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், ஆந்ரே ரஸ்ஸல் 35 ஓட்டங்களையும், கிரன் பொலார்ட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் மாலிங்க, இசுரு உதான, லக்ஷான் சந்தகன் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியால், 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, குசல் பெரேரா 66 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒசேன் தோமஸ் 5 விக்கெட்டுகளையும், ரொவ்மன் பவல் 2 விக்கெட்டுகளையும். செல்டோன் கொட்ரெல், ஆந்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3 ஓவர்கள் வீசி 7 உதிரிகள் அடங்களாக 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஒசேன் தோமஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது





முதலாவது ரி-20 போட்டியில் இலங்கையை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு