29,Mar 2024 (Fri)
  
CH
விளையாட்டு

கிரிக்கட் போட்டிகள் அட்டவணையை மீளத் திட்டமிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கிரிக்கட் போட்டி அட்டவணை மீளத் திட்டமிடல் குறித்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரதிநிதிகள் தற்போது முனைப்புடன் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் இந்த மாதம் இங்கிலாந்துக்கு பயணமாகவிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பயணம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாமதமடைந்துள்ளது.

இந்த போட்டிகள் ஜூலை மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூடிய மதானங்களில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் அனுமதியினை பெற வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக கலர்சார, ஊடக மற்றும் விளையாட்டு ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கிரிக்கட் போட்டிகள் அட்டவணையை மீளத் திட்டமிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு