பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு ஒக்டோபர் 14ம் திகதி இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால் இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள் மேலும் சட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்படும்.
அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த சர்வஜனவாக்கெடுப்பு ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்வஜனவாக்கெடுப்பு வெற்றிபெறுவதற்கு பெரும்பான்மை மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும்,மேலும் ஆறுமாநிலங்களில் நான்கு மாநிலங்கள் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும்.
இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ் அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவென தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..