பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, இந்தச் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி, இரவு நேர தபால் ரயில் சேவைகள் இன்று (16) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..