15,May 2025 (Thu)
  
CH
சினிமா

ரவி மோகன் - கெனீஷா விவகாரம் - ஆர்த்திக்கு எதிராக 5 பக்க அறிக்கை விட்ட ரவி


நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவி உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து அவர் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருங்கி பழகுவதாக கூறப்பட்டது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் நடந்த திருமண விழா ஒன்றில் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.


இது குறித்து அவரது மனைவி ஆர்த்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தங்களது விவாகரத்து நடைமுறைகள் தொடர்வதாகவும், ஒரு காலத்தில் எனக்கு உறுதியளித்த பொறுப்புகளிலிருந்து ரவி மோகன் விலகிச் சென்றதாகவும் தெரிவித்தார் அத்துடன் தந்தை என்பது வெறும் பட்டப்பெயர் மட்டுமல்ல. அது ஒரு பொறுப்பு என்று கூறியிருந்தார்.



இந்த நிலையில் ஆர்த்திக்கு பதிலளிக்கும் வகையில் ரவிமோகன் பதிலறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நமது நாடு ஒரு பெரிய கூட்டு நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்கள் மத்தியில் தனிப்பட்ட காரியங்கள் விவாதிக்கப்படுவதை பார்ப்பது வேதனையளிக்கிறது. என் தனிப்பட்ட வாழ்க்கை உண்மைக்கு மாறாக வதந்திகளாக பரப்பப்படுவது அதிர்ச்சியாகவுள்ளது. என் மெளனம் பலவீனம் அல்ல, என் வாழ்வில் உள்ள வடுக்களை பற்றி புரிந்து கொள்ளாமல், என் நேர்மை கேள்விக்குள்ளாகும்போது நான் பேச வேண்டி உள்ளது. மன உறுதியாலும் கடின உழைப்பாலும் என் வாழ்க்கையை உருவாக்கினேன். அதை என் கடந்தகால திருமண வாழ்வில் இருந்த உறவுகள் யாரும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக கையாளுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.



நான் உடல் மற்றும் மன ரீதியாகவும், கடுமையான நிதி துஷ்பிரயோகங்களில் இருந்தும் தப்பியுள்ளேன்(இதை சொல்லவே வருத்தமாக உள்ளது). இத்தனை ஆண்டுகளில் என் சொந்த பெற்றோரை சந்திக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. தாங்க முடியாத வாழ்வில் சிக்கிக்கொண்ட எனக்கு இறுதியாக விலகிச் செல்வதற்கான வலிமை வந்தது. இது அவ்வளவு ஈசியாக எடுத்த முடிவு அல்ல. இதை எல்லாவற்றையும் தவிர்ப்பதற்காக சகித்துக்கொண்டு இயல்பாக நடந்துகொண்டேன். பணம் கொடுத்துக்கொண்டே இருந்தேன். தங்க முட்டையிடும் வாத்து போல நடத்தப்பட்டேன்.


என் மீது அக்கறை கொண்டவர்களிடம் ஏற்கேனெவே மனம் திறந்து, என் முன்னாள் மனைவி தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி விருப்பதுடன் எனது முடிவை தேர்வு செய்தேன். மேலும் ஊகிக்கவோ அல்லது பழி சுமத்தவோ வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். ஆனால், நான் மெளனமாக இருப்பது குற்ற உணர்ச்சியால் எனத் தவறாக பேசப்படுகிறது. என் சமீபத்திய பொது நிகழ்வு பங்கேற்பு, ஒரு தந்தையாக எனது உரிமையை கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் அவதூறு செய்யப்படுவதை காண முடிகிறது. நான் அதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.



நான் எப்போதும் போல, கண்ணியத்துடனும், மன உறுதியுடனும், நீதியின் மீதான நம்பிக்கையுடனும் உண்மையின் பக்கம் தொடர்ந்து நிற்பேன். நான் வீட்டை விட்டு வெளியேறிய நிமிடத்தில் ex” என்ற சொல்லை மனதில் நினைத்தேன், அது என் இறுதி மூச்சு வரை அப்படியே இருக்கும். ஆனால், நிதி ஆதாயத்திற்காகவும், பொது மக்களின் அனுதாபத்தை தேட குழந்தைகளை கருவியாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. குழந்தையை பார்க்க வரும்போது பவுன்சர்களை வைத்து தடுக்க, கூடவே அவர்களை அனுப்புகின்றனர். தந்தையாக என் உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறார்களா?


என் குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மூன்றாம் தரப்பினர் மூலம் தெரிந்துகொண்டேன். அப்பா என்ற முறையில் அதை எனக்கு தெரியப்படுத்தவில்லை. கார் பழுதுபார்க்கும் காப்பீட்டிற்காக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. என் பிரார்த்தனைகளாலும், என் அளவற்ற அன்பினாலும குழந்தைகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன். நான் விலகிச் சென்றதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன். எனது குழந்தைகளை அல்ல. அவர்கள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி; அவர்களுக்காக அனைத்தும் செய்வேன் சில நாள்களாக எனக்கிருக்கும் வருத்தம், 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல. கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்குகூட அனுப்ப மறுக்கப்பட்டேன்

இத்தனை நாட்களாக அமைதியாக, பொறுமையாக இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு


இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் தற்போது நல்ல துணையாக இருப்பவர் கெனீஷா. அவர் ஒரு நல்ல மனிதர், என் வாழ்க்கையில் ஒளியாக வந்தவர். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதை கண்டிக்கிறேன். எனது குழந்தைகள் எனக்கு உயிர்; அவர்களுக்காகவே நான் நிறைய தியாகம் செய்திருக்கிறேன்; ஆனால் அவர்களை என்னிடம் இருந்து பிரிக்க, உண்மையை வலுக்கட்டாயமாக மாற்ற, என் மீது பொய்கள் பரப்புவது என்னை உடைத்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




ரவி மோகன் - கெனீஷா விவகாரம் - ஆர்த்திக்கு எதிராக 5 பக்க அறிக்கை விட்ட ரவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு