16,May 2025 (Fri)
  
CH
இந்திய செய்தி

கர்னல் சோபியா குரேஷியின் இஸ்லாமிய மதத்தை சுட்டிக்காட்டி பேசிய குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு

கர்னல் சோபியா குரேஷியின் இஸ்லாமிய மதத்தை சுட்டிக்காட்டி பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மத்திய பிரதேச அமைச்சரான குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தி முடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மேல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து குன்வார் விஜய் ஷா, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.


இந்நிலையில், நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, உயர் பதவியில் இருப்பவர் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கர்னல் சோபியா குரேஷி, பயங்கரவாதிகள் சமூகத்தின் சகோதரி என குன்வார் விஜய் ஷா தெரிவித்திருந்தார்.


தீவிரவாதிகள் எங்களின் சகோதரர்களை கொன்றனர். இதற்காக பிரதமர் மோடி, அவர்களின் சமூகத்தை சேர்ந்த சகோதரியை கொண்டு பதிலடி கொடுத்ததாக அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது




கர்னல் சோபியா குரேஷியின் இஸ்லாமிய மதத்தை சுட்டிக்காட்டி பேசிய குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Actress

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு