கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான சாரதியை, இந்த மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
0 Comments
No Comments Here ..