ராகமவில் கடந்த ஜூலை 3ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி "ஆமி உபுல்" மரணம் தொடர்பாக இதுவரை 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
"ஆமி உபுல்" ராகம, படுவத்தே கிராம சன்வாரன மாவத்தை பகுதியில் வைத்து இரவு வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை "படுவத்தே சாமர" என்ற மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நடத்தியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்த, 8 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவரின் தொலைபேசித் தரவுகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. "ஆமி உபுல்", "கணேமுல்லே சஞ்சீவ" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..