07,Jul 2025 (Mon)
  
CH

இணையவழி வாகன வருமான அனுமதிப்பத்திர சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு, இலங்கை, ஜூலை 6, 2025 – இலங்கையில் இணையம் வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.


கடந்த ஜூலை 3ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


ICTA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "சேவைகள் ஜூலை 9ஆம் தேதி வரை செயலிழந்திருக்கலாம். தொழில்நுட்ப சிக்கலுக்கு தீர்வு காணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேவை இயல்புநிலைக்கு திரும்பியவுடன், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.


வாகன உரிமத்தைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்தத் தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை வகுக்குமாறு ICTA கேட்டுக்கொண்டுள்ளது.




இணையவழி வாகன வருமான அனுமதிப்பத்திர சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு