07,Jul 2025 (Mon)
  
CH

காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை: ஹமாஸ், இஸ்ரேல் குழுக்கள் கட்டாரில் மறைமுக சந்திப்பு

காசாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதல்களுக்கு மத்தியில், 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் குழுக்கள் கட்டாரில் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஹமாஸ் தரப்பு சில திருத்தங்களை முன்வைத்த போதிலும், அவற்றை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தையைத் தொடரும் வகையில், இஸ்ரேல் தனது அதிகாரிகளின் குழுவை இன்று கட்டாருக்கு அனுப்பியுள்ளது.


போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் நோக்கில், கட்டார், எகிப்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.


இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை: ஹமாஸ், இஸ்ரேல் குழுக்கள் கட்டாரில் மறைமுக சந்திப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு