17,Mar 2026 (Tue)
  
CH
WORLDNEWS

டிரம்ப்பின் "Big Beautiful Law" நிறைவேற்றம்: அமெரிக்க பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்திற்கு முக்கிய நிதி ஒதுக்கீடு

அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரலாற்றுச் சிறப்புமிக்க "Big Beautiful Law" பிரேரணையில் கையெழுத்திட்டார். இந்தப் பிரேரணை அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரத் தீர்மானங்களை உள்ளடக்கியது.


இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களில், டொனால்ட் டிரம்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரித் திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக 150 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும், குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்க நடவடிக்கைகளுக்காக 100 பில்லியன் டொலர் நிதி இந்த பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.


பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 218 வாக்குகளும், எதிராக 214 வாக்குகளும் கிடைத்து நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.





டிரம்ப்பின் "Big Beautiful Law" நிறைவேற்றம்: அமெரிக்க பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்திற்கு முக்கிய நிதி ஒதுக்கீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு