23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஜெனீவாவில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தமது புதிய அறிக்கையில் , 2019 நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதிலிருந்து, இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவு அமைப்புகள் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளதுடன், வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தவிர, பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் எந்தவொரு கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்களின் உறவினர்கள் எவரையும் நாம் மையமாக கொண்டு செயற்படவில்லை. அந்த குடும்பங்கள் குறித்து கண்காணிக்க ஆயுதப்படைகளோயோ உளவுத்துறையோ நாங்கள் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர். ஆனால் இலங்கையில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் குறிவைத்துச் செயற்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களுடன் வடக்கு மற்றும் கிழக்கில் ஆறு இடங்களில் பணிபுரியும் ஆர்வலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது நாங்கள் குறி வைத்திருக்கவோ அல்லது அவர்களை மிரட்டும் செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடவில்லை.

ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளை குறிவைத்து அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டுள்ளன, என்று கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் , ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற பயன்கரவாத சம்பவங்களைத் தடுக்க, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுகளால் தனித்து செயற்பட்டு வந்த முழு உளவுத்துறையும் ஒரு வலுவான வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் மிரட்டப்பட்டதாகக் கூறியவர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




ஜெனீவாவில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு