இந்த மாதத்திற்குள் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் சில பாடங்கள் தொடர்பில் செயன்முறைப் பரீட்சைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள், செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..