இந்தியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த இருவரே மேற்படி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் மிகப்பெரிய நெருக்கடி நிலையை இந்தியா எதிர்கொள்ளும் எனவும், இங்கு வைரஸ் தாக்கம் எளிதில் பரவும் சாத்தியம் காணப்படுவதாகவும் உலக சுகாதார மையம் அண்மையில் எச்சரித்திருந்தது.
கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது. மொத்த இறப்புகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இறப்புகள் ஹுபே மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..