05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

கொரோனாவுக்கு 3,125 பேர் பலி- 90 ஆயிரம் பேர் பாதிப்பு

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய ‘கொரோனா’ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது.

சீனாவின் 31 மாகாணங்களில் பரவியுள்ள கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு தினமும் உயிரிழப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

நேற்று மேலும் 32 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் கொரோனா பலி 2 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 125 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 151ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தற்போது வைரசின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் 67 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

சீனாவுக்கு வெளியே ஈரானில் அதிகபட்சமாக 66 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 1501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்களிடையே பீதி நிலவி வருகிறது.

அதேபோல் தென் கொரியாவிலும் வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அங்கு நேற்று மேலும் 477 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4812 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருக்கிறது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் வடக்கு பிராந்தியத்தில் பரவிய கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 2036 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலியில் வேகமாக பரவி வரும் வைரசால் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி இருக்கிறார்கள். 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பரவி உள்ளதால் உலகம் முழுவதும் பீதி நிலவி வருகிறது. இதனால் கொரோனா வைரசை “மிக தீவிரம்” என்ற பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

ஜப்பான், ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், வியட்நாம், மெக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நார்வே, நெதர்லாந்து, சுவீடன், லெபனான், ஐஸ்லாந்து, ஈராக், ரஷ்யா, பிரேசில், எகிப்து, போர்ச்சுக்கல், அயர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, பெல்ஜியம், பின்லாந்து, கிரீஸ், சவுதி அரேபியா, நியூலாந்து, ஆஸ்திரேலியா, நைஜீரியா, துனிசியா, பெலாரஸ், லாத்வியா உள்பட 67 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாருக்காவது காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவியுள்ள இத்தாலிக்கு சென்று விட்டு டெல்லி திரும்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.





கொரோனாவுக்கு 3,125 பேர் பலி- 90 ஆயிரம் பேர் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு