05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்... நேதன்யாகு தொடர்ந்து முன்னிலை

இஸ்ரேல் நாட்டில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி, முன்னாள் ராணுவ தளபதி பென்னிட் கான்ட்சின் புளு அண்ட் ஒயிட் கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

உள்ளூர் நேரப்படி இன்று காலை நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நேதன்யாகுவின் லிக்குட் கட்சி 36 இடங்களிலும், புளூ அண்ட் ஒயிட் கட்சி 28 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. இதே நிலை நீடித்தால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. 

புதிய தேர்தல் நடைமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்களின் வாக்குகளை எண்ணும் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால், அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடுவது தாமதம் ஆகிறது. முழுமையான முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. 120 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி 36 முதல் 37 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கு 32 அல்லது 34 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பிற கட்சிகள் 49 முதல் 51 இடங்கள் வரை பிடிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

லிக்குட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 59 அல்லது 60 இடங்களை பிடிக்கலாம் என்றும், ஆட்சியமைக்க ஓரிரு இடங்களை தேவைப்படும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இதனால் நேதன்யாகு உற்சாகம் அடைந்துள்ளார். கடந்த தேர்தல்களைப் போன்று அல்லாமல் இந்த முறை மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இது இஸ்ரேலுக்கான மிகப்பெரிய வெற்றி என்றும் நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதும் லிக்குட் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் இந்த கட்சிகளால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலிலும் இதே நிலை நீடித்ததால், புளூ அண்ட் ஒயிட் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதும் நேதன்யாகுவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. 

எனவே, மீண்டும் பாராளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் பாராளுமன்றம் ஒரு வருடத்திற்குள் 3-வது முறையாக தேர்தலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்... நேதன்யாகு தொடர்ந்து முன்னிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு