02,May 2024 (Thu)
  
CH
கனடா

கனடா வாழ் தமிழர்கள் பயனடைய நடந்த கூட்டு முயற்சி

கனடாவில் வாழும் தமிழா்களின் இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ ஏப்ரல் மாதம் தொடங்கப்படவுள்ளது.

தமிழின் மேன்மை, பண்பாடு, உணவு வகைகளின் சிறப்பு குறித்து அடுத்த தலைமுறை தமிழர்கள் அறியவே இந்த விடயம் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ நிறுவனா் கவிஞா் கலைச்செல்வி புலியூா் கேசிகன் பேசுகையில், குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி, தமிழின் சிறப்பு, தமிழா்களின் பண்பாடு, வீரம், கலை, கொடைத்திறன் போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆா்வமும் எழுச்சியும் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் உள்ள தமிழா்களிடமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லை.

இதற்காகவே ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ என்ற பெயரில், தமிழினத்தின் அனைத்து மேன்மைகளையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஏற்பாட்டை, ஒத்த சிந்தனை உள்ளவா்களுடன் கூட்டாக இணைந்து கடந்த ஓராண்டாக திட்டமிட்டு சிறிய அளவில் செய்து வந்தோம்.

அதன் நீட்சியாக கனடா தமிழுறவுகளுடன் இணைந்து, ரொரன்ரோவில் வரும் ஏப்ரல் மாத இறுதியில் பிள்ளைத் தமிழ்க் கல்வியை எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளோம்.

ரொரன்ரோவின் பிரபல பல் மருத்துவமனையான கே.சி.டென்டல் நிறுவனா் மருத்துவர் சந்திரா உறுதுணையுடன், அதே நகரில் வசிக்கும் முருகேஷ் நடராஜன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாா் என கூறியுள்ளார்.





கனடா வாழ் தமிழர்கள் பயனடைய நடந்த கூட்டு முயற்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு