17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டினுள் வைரஸை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இருக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலுக்காக சென்றுள்ளவர்கள் தாயகம் திரும்பவதற்கு மேற்கொண்டுள்ள கோரிக்கை தொடர்பில் நாட்டில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் அல்லது பிற இடங்களுக்கு செல்வதன் மூலம் நோய்த் தொற்றுக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.

அதன் காரணமாக, தாம் தொடர்பான தகவல்களை குறித்த நாட்டின் இலங்கை தூதரம் அல்லது துணைத்தூதரகத்திற்கு அறியப்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு தாயகம் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் வௌியுறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலளார் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே கோரிக்கை விடுத்துள்ளார்.





இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு