02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சகல காப்புறுதி நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து குறித்த நிவாரணத்தை காப்புறுதிதாரர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காப்புறுதி தவணை பணத்தை செலுத்த மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சலுகை காலம் சாதாரண மற்றும் ஆயுற்காப்புறுதிதாரர்களுகும் பொறுந்தும் என கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்தால் காப்புறுதிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு