கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.39 லட்சம் பேர். அதே உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பலர் இறந்துள்ளனர்.
இந்தியாவிலும் அண்மையில் நடிகர் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் புற்று நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.
தற்போது தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008 ல் வெளியான அழைப்பிதழ் என்னும் படத்தை இயக்கியவர் பி.கே.ராஜ் மோகன். இதில் சோனா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
47 வயதாகும் அவர் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். அவரின் நண்பர் வீட்டிற்கு தினசரி மதிய உணவருந்த செல்வது வழக்கமாம். ஆனால் ஒரு நாள் வரவில்லையாம். இதனால் அவரின் நண்பர் அவரை தேடி வீட்டிற்கு சென்ற போது இயக்குனர் ராஜ் மோகன்வீட்டில் இறந்து கிடந்தாராம்.
ராஜ் மோகன் மாரடைப்பால் இறந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அவரின் ரத்த மாதிரியையும் எடுத்துள்ளனராம்.
0 Comments
No Comments Here ..