17,Sep 2024 (Tue)
  
CH
சினிமா

தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷூக்கு திருமணம்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.




தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷூக்கு திருமணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு