03,Dec 2024 (Tue)
  
CH
சினிமா

காதல் தோல்வியில் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை சரண்யா

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநராக இருந்து பிரபலமானவர் பாக்யராஜ். நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்து சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் பெற்றெடுத்தார். நடிகராக தற்போது சாந்தனு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அவரது மகளையும் சினிமாத்துறையில் அறிமுகப்படுத்த பாக்யராஹ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் நடிகையாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் கதாநாயகனாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார். இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுவும் எழுந்தது. இது வெறும் வதந்திதான் என்று அதன்பின் தெரிய வந்தது.

நடிகை சரண்யா படவாய்ப்பில்லாமல் மூன்று படங்களிலே சினிமாவைவிட்டு விலகினார். ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த தமிழர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சில காலங்களில் காதல் தோல்வியால் சரண்யா தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதையடுத்து காப்பாற்றப்பட்ட சரண்யா அனைத்தையும் வெறுத்து எதிலும் பங்கு கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார். 35 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சரண்யா சாந்தனுவின் திருமணத்தில் கூட பெரிதாக தலையை காட்டாமல் இருந்தார்.




காதல் தோல்வியில் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை சரண்யா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு