அஜித்தின் 49வது பிறந்தநாள் நாளை வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த நேரத்தில் அஜித் தன் பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. மேலும் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அஜித் பிறந்தநாளை கொண்டாட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேகை ரசிகர்கள் தற்போது அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேகை வைத்து தான் அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக் அறிவிக்கப்பட்ட வேகத்தில் ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி டிரெண்டாக்க விடுவதில் அஜித் ரசிகர்கள் வல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அஜித் பிறந்தநாள் அன்று அவர் நடித்து வரும் வலிமை படம் குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என்று வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ட்வீட் செய்துவிட்டார்.
அவர் அப்டேட் கொடுக்காவிட்டால் என்ன நாம் தல பிறந்தநாளை கொண்டாடுவோம் என்று ரசிகர்கள் கிளம்பிவிட்டார்கள். இன்று விடிய விடிய ட்வீட் செய்யப் போகிறார்கள்.
அஜித் கடந்து வந்த பாதை, அவர் செய்த சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள், அதில் இருந்து மீண்டு வந்தது என்று பழைய விஷயங்களை எல்லாம் ரசிகர்கள் பேசித் தீர்க்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..