கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பணமின்றி மே மாதம் 29ஆம் திகதி வரை செலுத்துவதற்கு மேலும் நிவாரணக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடரபாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஏடக அறிக்கை பின்வருமாறு,
கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதினால் செலுத்த முடியாமல் போன போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப் பணமின்றி செலுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் உடன்பாட்டில் நிதியமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் 2020.05.02 வரையில் நிவாரண காலத்தை வழங்குவதற்கு தபால் திணைக்களத்தினால் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்த நிவாரண காலத்தில் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்றல் பணி , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளுக்காக மூடப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் 2020.04.29ஆம் திகதி தொடக்கம் 2020.05.04 வரையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை மற்றும் மேல்மாகாணம் , புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக மூடப்பட்டிருந்த, மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக இது வரையில் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாததால் 2020.05.02 வரையில் வழங்கப்பட்ட நிவாரணக் காலத்திற்காக மேலதிக நிவாரண காலத்தை 2020.05.11 தொடக்கம் 2020.05.29 திகதி வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மார்ச் 01 திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு நிவாரணக் காலம் உரித்தாகும்.
இதேபோன்று 2020.02.16ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் தண்டப்பண கட்டண ஆவண கட்டணத்தை 28 நாட்களுக்குள் செலுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தண்டப்பணத்துடன் ; போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்பதற்கு நிவாரண கால அவகாசம் கிடைக்கும்.
2020.05.11ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் வழமையான நடவடிக்கைளுக்காக திறக்கப்படும் என்பதினால் இதனை தடையின்றி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
மேலே குறிப்பிடப்பட்ட ஊடக அறிக்கையை அனைத்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..