காவல்துறை அதிகாரிகள் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து களுத்துறை வடக்கு காவல்துறை நிலையத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (24) காலை மேல் மாகாண எல்லைகளில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் பாடசாலை மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் குறித்த மாணவனின் தந்தை களுத்துறை வடக்கு காவல்துறை நிலையத்தில் கடமையாற்றுகின்ற காரணத்தால் காவல்துறை நிலையத்தில் 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த மாணவனின் தந்தை உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் களுத்துரை வடக்கு பொலிஸ் நிலையத்தின் ஏனைய அதிகாரிகளுக்கு இன்று பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..