23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.




யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு