19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,000ஐ கடந்தது!

நாட்டில் நேற்று 719 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,313 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 697 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 48,525 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

7,311 பேர் தற்போது நாடு முழுவதும் 65 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 487 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,746 ஆக உயர்ந்தது.

கொரொனா சந்தேகத்தில் தற்போது 641 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.




இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,000ஐ கடந்தது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு