15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

யாழ் குடாநாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்

யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கமைவாக, உள்ளூர் கைத்தறி, துணி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தான் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்திற்கு இன்று காலை சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், அங்குள்ள தையல் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி உற்பத்திக்கான பொருட்களை 30 பெண்களுக்கு வழங்கிவைத்து 3 மாத பயிற்சி நெறியையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது வேலணை பிரதேசபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் குறித்த பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இராஜாங்க அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக யாழ் மாவட்டத்திலுள்ள சுயதொழிலில் ஈடுபடக் கூடிய இளைஞர் யுவதிகளை இணைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதுடன்,

புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பற்றிக் கைத்தொழில் உற்பத்தியைப் போன்று யாழ் மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படும் உள்ளூர் பற்றிக் உற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வது தருமாறும், புதிதாக உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன் கருதிய யோசனைகள் ஒவ்வொன்றையும் இந்த அரசு குடாநாட்டு மக்களுக்காக செய்துகொடுக்க தயாராக உள்ளது என்றார்.




யாழ் குடாநாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு