உயிர்த்தஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இன்றைய தினம் (23) அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்றிரவு (22) அமைச்சரவை கூடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் சிங்கள பிரதி தயாரிக்கப்படாமையினாலேயே, அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க சற்று தாமதம் ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து, அறிக்கையிலுள்ள விடயங்களை மறைப்பதற்கான தேவை தமக்கு கிடையாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
0 Comments
No Comments Here ..