ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை சந்திப்பு நேற்று இரவு கூடியவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை வழங்கியுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே குறித்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரி தவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதும் வழக்கு தொடர்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
0 Comments
No Comments Here ..