01,Feb 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

போர்ட் சிட்டிக்கு ஆதரவு - கட்சியில் இருந்து இருவரை தூக்கியது ரிசாட் அணி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.எம்.ஷஹீத் தெரிவித்துள்ளார்.


கட்சியின் தீர்மானத்துக்கு புறம்பாக செயற்பட்டு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆதரித்த அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே கட்சி உறுப்புரிமையிலிருந்து இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தடுப்புக் காவலில் உள்ள நிலையில், கட்சித் தலைவரின் அதிகாரங்கள் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் குறித்த இருவரையும் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதற்கான கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீத் தெரிவித்துள்ளார். 




போர்ட் சிட்டிக்கு ஆதரவு - கட்சியில் இருந்து இருவரை தூக்கியது ரிசாட் அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு